பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் இந்த பாதிப்பு குறைவு! வெளியான ஆய்வின் முடிவுகள்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் Omicron தொற்றுக்கு எதிராக 88 சதவீத பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Omicron வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. Omicron-னில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக எவ்வகை செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து ஆய்வின் முடிவுகளை அந்நாட்டு சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியதாவது, 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு Omicron எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக்கிறது. ஆனால் 2வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாக குறைகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளிலும் 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரானிடம் இருந்து ஆபத்து குறைவு என்பது வெளியாகியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் டெல்டாவுடன் ஒப்பிடுகையில் Omicron-க்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.