தகதகன்னு சருமம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் ஜொலிக்க தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.
சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்
கூந்தலுக்கு மட்டுமன்றி சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெய் பெரிதளவில் உதவுகிறது.
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர் வீச்சுக்களின் தாக்கத்தால் சரும புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.
இதுபோல சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர் 20% வரை இயற்கையாகவே தடுக்கும் தன்மை இந்த தேங்காய் எண்ணெயில் உள்ளது.
தினமும் பல் துலக்கும் போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் சார்ந்த பிரச்சினைகளை நாளடைவில் குணப்படுத்த முடியும்.
தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
நம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க தினசரி இரவு தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |