ஒரே நாளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு சீரம் போதும்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் ஜொலிக்க இந்த ஒரு சீரம் போதும்.
தேவையான பொருட்கள்
- அரிசி கழுவிய நீர்- 2 ஸ்பூன்
- கற்றாழை- 1 ஸ்பூன்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும்.
பின் அதனுடன் சிறிதளவு கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நீண்ட நேரம் கலக்கவும்.
அடுத்து இதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இரவில் படுக்கும் போது இதை முகத்தில் தடவி வந்தால் முகம் கொரியன் முகம் போல் பளபளக்கும்.
கிடைக்கும் பலன்கள்
அரிசி கழுவிய நீரில் பல சத்துக்கள் உள்ளன. இவை அழகை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.
கற்றாழை சருமத்தை பளபளக்கும். இதை பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.
கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பும், மென்மையும் கிடைக்கும்.
கிளிசரின் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, சரும செல்களை ஈரப்பதமாக்குகிறது. இது சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கும்.
ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் படிந்துள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் வெளியேறும்.
மேலும், ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதன் மூலம், முகத்தின் pH அளவுகள் கட்டுப்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |