தினமும் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக காலையில் எழுந்ததும் அனைவரும் விரும்பிய பருகும் பானங்களில் ஒன்று தான் இந்த காபி.
பலரும், காலையில் எழுந்து காபி குடிக்காமல் அன்றைய பொழுதே போகாது என்று சொல்லி கேட்டிருப்போம்.
மத்திய நரம்பு மண்டலத்தில் கஃபைனின் தூண்டுதலால் கடினமான காலை நேரத்தில் காபி ஆற்றலை தருகிறது.
அந்தவகையில், தினமும் காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள் என்ன?
தினமும் காபி குடிப்பது இருதய நோய் மற்றும் ஆரம்பகால இறப்பு அபாயத்தைக் குறைக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
மேலும், சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பை காபி கொண்டிருப்பதால் டைப் 2 நீரிழிவு நோய், பார்கின்சன் மற்றும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
காபியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் காபி குடிப்பதால் நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும், இதன்மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதேபோல், அதிகப்படியாக காபி குடிப்பது நடுக்கம், பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற எதிர்மறை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |