தினமும் இந்த நேரத்தில் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிச்சு பாருங்க!
எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன ஒரு அற்புத பழமாகும்.
இது சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகு, ஆரோக்கிய பிரச்சினைகள் போன்ற பலவகை நன்மைகளை தருகின்றது.
எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுகின்றது. அந்தவகையில் நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.
எப்போது, எப்படி குடிப்பது?
எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம்.
நன்மைகள்
- எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள பாக்டீயாக்களின் அளவு குறையும். இதன் விளைவாக சருமம் சுத்தமாக இருக்கும். குறிப்பாக எலுமிச்சை வேக வைத்த நீர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, சருமத்தில் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.
- எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.
- எலுமிச்சை வேக வைத்த நீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக இது வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உடலை சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
- எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும் மற்றும் உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.
- எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலுவாகும்.
- எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது சிறுநீரக கற்களில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டின் விளைவைக் குறைக்கும்
குறிப்பு
அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும். எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.