நோய்க்கு எதிராக போராடும் எலுமிச்சை மிளகு டீ! எப்படி செய்வது?
பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
எலுமிச்சை பழத்தில் விட்டமின் B, C, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் நிறைந்துள்ளது.
இது பல நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. அந்தவகையில் தற்போது எலுமிச்சையை கொண்டு சூப்பரான டீ ஒன்றை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான
- பொருட்கள் எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகு - 1/4 தேக்கரண்டி
- தேன் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை
2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.
எலுமிச்சை மிளகு டீ கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.