தினம் ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு ஸ்பூன் சுக்கு பொடி: கிடைக்கும் 7 நற்பலன்கள் இதோ
இஞ்சியை சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து நன்கு உலர்த்தினால் கிடைப்பது தான் சுக்கு. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், தினமும் இரவில் சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் சுக்கு பொடி கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும்.
இதை மற்ற நாட்களை விட குளிர்காலத்தில் எடுத்துக்கொள்வது நிறைய பலன்களை கொடுக்கும். இதனால் உடலுக்கு கிடைக்கும் 7 நற்பலன்களை குறித்து விரிவாக காணலாம்.
கிடைக்கும் பலன்கள்
சுக்குப் பொடியை பாலில் குடித்து வர சுக்கில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்கின்றன.
வெதுவெதுப்பான பாலில் சிறிது சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியும் கரைந்து வெளியேற ஆரம்பிக்கும்.
சுக்கில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் எலும்புகளில் ஏற்படும் பலவீனம் மற்றும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்க உதவி செய்யும். மேலும் பாலில் உள்ள கால்சியம் எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து, எலும்புகளை வலுவாக்குகிறது.
மேலும், இந்த பணத்தை தொடர்ந்து இரவில் குடித்து வர வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சினை குறைய ஆரம்பிக்கும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீராக்கும். மேலும், ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதலைத் தடுக்கும்.
சுக்கில் உள்ள ஆன்டி - இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடலின் உட்புறத்தில் இருக்கும் வீக்கங்கள் மற்றும் காயங்களை குறைக்க செய்யும்.
சுக்கில் உள்ள பண்புகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |