காலை எழுந்தவுடன் சுடு தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் குளிந்த நீரை விட சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும்.
குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிப்பது இன்னும் பல நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகின்றது.
அந்தவகையில் தற்போது சுடுநீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
Image - medicalnewstoday
- சூடான நீரை குடிப்பது நமது செரிமான மண்டலத்தை தூண்ட உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் சூடான நீர் உதவுகிறது.
- சூடான நீர் பருகுவதால் உடலின் வெப்பம் அதிகரித்து வியர்வை உண்டாகிறது, அந்த வியர்வையின் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் புத்துணர்வு பெறுகிறது.
- சூடான நீர் உங்கள் சரும செல்களை சரிசெய்து, சருமத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கிள்களை குறைக்கிறது. இதனால் உங்கள் சருமம் மிருதுவாகி, இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
- காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கலாம், இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்க உதவும்.
- சளி மற்றும் நாசி அலர்ஜியால் ஏற்படும் சைனஸை குறைக்கிறது, நல்ல ரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
குறிப்பு
தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால், அது உங்கள் நாக்கு மற்றும் சுவை மொட்டுகளை பாதிக்கப்படும் மற்றும் உணவுக்குழாய் மற்றும் வயிறு போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படும்.
இரவு தூங்குவதற்கு முன்னர் வெந்நீரைக் குடிப்பது சிலருக்கு தூக்கத்தை கெடுத்துவிடக்கூடும்.