இரவு முழுவதும் ஊறவைத்த கொத்தமல்லி விதை தண்ணீர்: நன்மைகள் என்னென்ன?
கொத்தமல்லி விதைகள் சமையலுக்கு மட்டுமின்றி மாறாக பலவித மருத்துவ பலன்களை பெறவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கொத்தமல்லி விதையில், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
உடலுக்கு பல நன்மைகள் தரும் கொத்தமல்லி விதைகளை முன்தினம் இரவு தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் குடிக்கலாம்.இதனால் உடலுக்கு பல நன்மைகள் வந்தடையும்.
Healthy veg recipes
தயாரிப்பது எப்படி?
முன்தினம் இரவு 1 டேபிள் ஸ்பூன் தனியா விதைகளை 1 கப் குடிநீரில் ஊற வைத்து விடுங்கள். பின் காலையில் அந்த தண்ணீரை எடுத்து அதிலிருக்கும் தனியா விதைகளை வடிகட்டி அந்த தண்ணீர் பருகுங்கள்.
கிடைக்கும் நன்மைகள்
கொத்தமல்லி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உடலில் ஃப்ரீரேடிக்கல் ஆக்டிவிட்டியை குறைக்க உதவுகின்றன.
கொத்தமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோவிட்-19 உட்பட பல நோய்களை எதிர்த்து போராட உதவும்.
கொத்தமல்லி விதைகளில் முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை நம்முடைய கூந்தலை ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.
இந்த தண்ணீரை குடிப்பது முடி உதிர்வு மற்றும் முடி உடைவதை குறைக்க உதவும். மேலும் தனியாவை எண்ணெய் பயன்படுத்தினாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கொத்தமல்லி தண்ணீரை காலையில் குடிப்பது அந்த நாள் முழுவதும் செரிமானத்தை மேம்படுத்த மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இந்த இரண்டுமே உடல் எடை குறைய முக்கியமான விஷயங்களாகும்.
கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது உடலில் குவிந்திருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
கொத்தமல்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது தவிர பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது.
எனவே காலையில் இந்த தண்ணீரை குடிப்பதால், சருமம் பொலிவாகும். பிக்மென்டேஷன் மற்றும் பருக்களை குறைத்து மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |