தினமும் ஊறவைத்த 5 உலர் திராட்சை..நன்மைகள் ஏராளம்!
உலர் திராட்சையில் தாமிர சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெறும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும். கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
மேலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாதும், தினமும் 5 உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஏராளமான நன்மைகள் வந்தடையும்.
உலர் திராட்சை சாப்பிடும் முறை
- 5-7 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும்.
- இதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம்.
- இதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் சிறந்த மாற்றங்களை காண முடியும்.
ஊற வைத்த உலர் திராட்சையின் நன்மைகள்
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் அதிக நன்மைகளை தரக்கூடியவை.
இரும்புச்சத்து குறைபாட்டை போக்க தினமும் 5 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து உலர் திராட்சையையும் சாப்பிடலாம்.
உலர் திராட்சையில் நிறைந்துள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
உலர் திராட்சை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை ஊற வைத்து சாப்பிட்டு வர இருதய நோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான வலி இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் இருக்கலாம். மாதவிடாய் சார்ந்த இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஊறவைத்து உலர் திராட்சை நன்மை தரும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் 5 ஊற வைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |