தினமும் வாழை இலையில் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
அந்த காலத்தில் மக்கள் மூன்று வேளையும் தரையில் அமர்ந்து வாழை இலையில் தான் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட காலம் வாழ முடிந்தது.
ஆனால் நாம் பெரும்பாலும் பிளாஸ்டிக் தட்டு, பை ஆகியவற்றை பயன்படுத்துவதால் பல வித நோய்கள் நம்மை தாக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறது. வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
வாழை இலையில் உணவை உண்ணும் போது எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான சக்தியை அதிகரிப்பதால் உணவானது எளிதில் செரிமானமடைய உதவுகின்றன.
மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால் உடலுக்கு தேவையான குளோரோபில் கிடைக்கின்றது.
வெளியே செல்லும் போது உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி செல்வதை விட வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால் உணவானது கெடாமல் இருப்பதுடன் நல்ல மணத்துடனும் இருக்கும்.
வயது செல்லச் செல்ல அனைவருக்குமே தோலில் ஈரப்பதம் குறைந்து, வறட்சி தன்மை ஏற்பட்டு, தோலில் சுருக்கங்கள் உண்டாகி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் மூன்று வேளையும் வாழை இலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு தோலில் நீர் வறட்சி ஏற்படாமல் பளபளப்புத் தன்மை காக்கப்பட்டு தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் எப்போதும் இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.