தானியங்களை முளைகட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.., என்னென்ன தெரியுமா?
பருப்பு, விதைகள் மற்றும் தானியங்களை வேகவைத்து சாப்பிடுவதை விட முளைகட்டி உண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றின் அளவு முளைக்கட்டும்போது பலமடங்காகிறது.
எனவே, தானியங்களை முளைகட்டி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
பருப்பு வகைகளில் உள்ள இரும்புச்சத்து முளைகட்டும்போது அதில் வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகிறது. அது நம் உடலில் இரும்புச் சத்தாக மாற்றமடைகிறது.
சோயா பீன்ஸ்,போன்ற பருப்புகளை பச்சையாகவோ அல்லது ஊற வைத்தோ உண்டால் அதில் உள்ள ஒருவகை புரோட்டீன்கள் நம் உடலுக்கு ஒத்துக்காத செயல்களை உண்டாக்கிவிடும்.
இதனால் அஜீரணம், பேதி போன்றவற்றை உண்டாக்கிவிடும். இதனால் இந்த வகை பருப்புகளை வேக வைத்து உண்ணலாம். இதனால் நச்சுப் பொருள்கள் செயலிழக்கச் செய்கிறது .
ஆனால் வேக வைக்கும்போது பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள் வெளியேறி விடுகின்றன.
எனவே இந்த வகை பருப்புகளின் நச்சுத்தன்மையும் போக வேண்டும் , வைட்டமினும் அழியக்கூடாது என்றால் அதற்கு முளைக்கட்டி வைத்து உண்பதே சிறந்தது.
முளைக்கட்டி வைத்தலின் போது பருப்பு வகைகள் எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாக மாறிவிடும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்துத் சாப்பிடுவதைப் விட வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிடுவது. சிறந்தது .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |