வாரம் 2 நாள் சுண்டைக்காய் சாப்பிடுங்க.. நோய்கள் பறந்தோடும்
Sundakkai Benefits: பொதுவாகவே, சுண்டைக்காய் என்றால் பலருக்கும் ஒரு பிடித்த உணவாகவே இருக்கிறது. இதை கிராமப்புறங்களில் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்கு உபயோகப்படுத்துவார்கள். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழு தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.
அதனுடைய கிளைகள் இரத்தக் கசிவினை தடுக்க கூடியது. அதனுடைய கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. அதோடு, ஜீரண தன்மை கொண்டது. ஆதலால் சுண்டைக்காய் வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் நமக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கிறது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
உடல் சோர்வு:
சுண்டைக்காய் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் நம்முடைய உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு பெறுகிறது. ஆதலால், இதனை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடல் சோர்வு முற்றிலும் விலகும்.
சுவாசப் பிரச்சினை:
ஒருவருக்கு சுவாசம் தொடர்பான நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காய் உணவில் சேர்த்து வந்தால் பிரச்சனை விலகும். வயிற்றுப்புண்: வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் முற்றிலும் வெளியேறிவிடும். அதோடு அல்சர் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமடையும். வயிற்றின் உட்புற சுவர்கள் பலம் பெறும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும்:
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பு ஆக்கி சாப்பிடலாம். இதனை சாப்பிடும் பொழுது குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி அவை நம் ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

கபம் மற்றும் காச நோயாளிகளுக்கு:
சுண்டக்காயை சாப்பிடுவதால் நமக்கு தலை சுற்றல் வாந்தி மயக்கம் ஆகியவை நீங்குகிறது. மேலும், மார்புச் சளி, தொண்டை கட்டு போன்றவற்றுக்கு இவை சிறந்த நிவாரணியாகவும். அதோடு, ஆஸ்துமா காச நோயாளிகள் இதனை சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனை முற்றிலும் குறையும்.
சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு:
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை இவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இவை ஒரு நல்ல உணவாக அமைகிறது. பச்சை சுண்டைக்காயை சமையலில் நாம் சேர்த்துக் சாப்பிடலாம் அல்லது சுண்டைக்காய் வத்தல் ஆகவும் பயன்படுத்தலாம்.
இருப்பினும் இதில் அதிக அளவு கசப்பு தன்மை இருப்பதால் அளவுக்கு அதிகமாக எஎடுக்காமல் வாரத்திற்கு இருமுறை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்ல ஆரோக்கிய பலனை கொடுக்கும்.