ஆண்கள் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை!
ஆண்கள் அமர்ந்து சிறுநீர் கழித்த உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆண்கள் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும்?
ஆண்கள் பொதுவாக நின்றபடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

ஆனால் ஆண்கள் அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிறுநீர் பாதையில் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் இவ்வாறு அமர்ந்த சிறுநீர் கழிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் சொல்லும் முக்கிய காரணங்கள்
ஆண்கள் அமர்ந்து சிறுநீர் கழிக்கும் போது இடுப்பு தசைகள் முற்றிலுமாக தளர்ந்து, சிறுநீர் குழாயின் அழுத்தமும் குறைகிறது, இதனால் சிறுநீர் ஓட்டம் வேகமாகவும், சரியாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுநீர் தொற்று பரவல் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் போன்ற நோய் அபாயங்கள் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்ந்து சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் தெறிக்காமல் கழிப்பறை இருக்கை, தரை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
மேலும் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், ஒரு நிமிடம் அமர்ந்து சிறுநீர் கழிப்பது மன அமைதியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |