மனைவி மீது ஆசிட் அடித்த நபர் தமிழகத்தில் சாமியார் வேடத்தில் கைது!
பெங்களூருவில் கடந்த மாதம் தனது மனைவி மீது ஆசிட் ஊற்றிய நபரை பொலிஸார் தமிழகத்தில் ஒரு ஆசிரமத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் பெங்களூருவில் தனது மனைவி மீது ஆசிட் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தமிழகத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில், சாமியாராக வேடமணிந்து தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நாகேஷ், ஏப்ரல் 28-ஆம் திகதி பெங்களூருவிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்! எழுந்துள்ள புதிய சர்ச்சை
பாதிக்கப்பட்ட பெண் தாக்குதலில் இருந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பின்னர் அவர் தனது கணவன் மீது புகார் அளித்ததை அடுத்து, அவரைப் பிடிக்க 7 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், நாகேஷ் தமிழகத்தில் திருவண்ணாமலையில் ஒரு ஆசிரமத்தில் சாமியார் வேடமிட்டு பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
விளாடிமிர் புடினுக்கு என்ன நோய்? அம்பலமான இரகசியம்