பெங்களூருவில் தீப்பற்றிய வீட்டில் கிடைத்த பெண் உடல்: பின்னர் வெளியான அதிரவைக்கும் உண்மை
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டுக்குள் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் புகையால் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
தீப்பற்றிய வீட்டில் கிடைத்த பெண் உடல்
இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 3ஆம் திகதி, பெங்களூருவிலுள்ள ராமமூர்த்தி நகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

Credit : Asianet News
தீயணைப்புத்துறையினருடன் அங்கு விரைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிப்பதைக் கண்டுள்ளார்கள்.
விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷர்மிளா (32) என தெரியவந்தது.
அவர் புகையில் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், தடயவியல் நிபுணர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியான அதிரவைக்கும் உண்மை
விசாரணையில், ஷர்மிளாவும் அவரது வீட்டுக்கு எதிரே குடியிருக்கும் கிருஷ்ணய்யா (18) என்னும் இளைஞரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள, அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளியானது.
ஆம், கிருஷ்ணய்யா ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பால்கனியிலுள்ள ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணய்யா, ஷர்மிளாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

Credit : ETV Bharat
ஷர்மிளா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கிருஷ்ணய்யா ஷர்மிளாவின் கழுத்தில் தாக்கியதுடன், அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
அது கொலை என தெரியவராமல் இருப்பதற்காக, கட்டிலின்மேல் துணிகளைப் போட்டு கிருஷ்ணய்யா தீவைத்துவிட்டு வெளியேற, தீ வீடு முழுவதும் பரவியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |