தென்னந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு முதல்முறையாக நேரடி விமான சேவை
Bengaluru to Zurich Direct Flight Launch: முதல்முறையாக தென்னந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
நேரடி விமான சேவை
பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரத்திற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
SWISS International Air Lines நிறுவனம், அக்டோபர் 28, 2026 முதல் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறது.

வாரத்திற்கு 5 முறை
இது தென் இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு செல்லும் முதல் நேரடி விமானம் என்பதால், பயணிகளுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும்.
இந்த புதிய சேவை வாரத்திற்கு 5 முறை இயக்கப்படும்.
பெங்களூருவிலிருந்து சூரிக்கிற்கான விமானம் மாலை நேரத்தில் புறப்பட்டு, அடுத்த நாள் காலை சூரிக்கில் தரையிறங்கும். அதேபோல், சூரிக்கில் இருந்து பெங்களூருவுக்கு வரும் விமானம் இரவு நேரத்தில் புறப்பட்டு, அடுத்த நாள் காலை பெங்களூருவில் தரையிறங்கும்.
இதன்மூலம், சுவிட்சர்லாந்துடன் நேரடி விமான இணைப்பைக் கொண்ட தென்னிந்தியாவின் முதல் நகரமாக பெங்களூரு மாறும்.
SWISS நிறுவனம் தெரிவித்ததாவது, “பெங்களூரு, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மற்றும் வணிக மையமாக இருப்பதால், இந்த நேரடி சேவை வணிக பயணிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளது.
இதுவரை, சுவிட்சர்லாந்து செல்ல விரும்பும் தென் இந்திய பயணிகள் டெல்லி அல்லது மும்பை வழியாகவே பயணம் செய்ய வேண்டியிருந்தது. புதிய சேவை அறிமுகமாகியதால், பயண நேரம் குறையும், இடைநிலைய சிரமங்கள் தவிர்க்கப்படும்.
பெங்களூருவில் இருந்து சூரிக்கிற்கான இந்த நேரடி விமானம், இந்தியா-சுவிட்சர்லாந்து உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |