6வது முறையாக பிரதமராக பதவு ஏற்பு! அரசியல் பிரபலத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6வது முறையாக பதவி ஏற்றார்.
பெஞ்சமின் நெதன்யாகு
ஆசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் பிரதமருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் யாயிர் லாபிட் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில், பெஞ்சமினின் கட்சி 64 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கூட்டணி கட்சிக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம் பெஞ்சமின் நெதன்யாகு 6வது முறையாக இஸ்ரேலின் பிரதமரானார். அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.அத்துடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
இந்த நிலையில் புதிய அரசுக்காக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 120 உறுப்பினர்களில் 63 பேர் ஆளும் அரசுக்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
பிரதமரின் வாக்குறுதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் பிரதமரான நெதன்யாகு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றங்களை விரிவுபடுத்துவதாகவும், பாலஸ்தீனிய எதிர்ப்புக் கொள்கைளை பின்பற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
@Reuters
அத்துடன் அரபு - இஸ்ரேல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதும், இஸ்ரேலின் ராணுவத் திறனை வளர்ப்பதும் தான் தனது அடுத்த பணி என அவசர கூறினார்.
இதற்கிடையில், ஆறாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நெதன்யாகுவிற்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.