நாங்கள் தாக்குதலை நிறுத்தமாட்டோம்... இது தொடரும்! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டமான அறிவிப்பு

Israel Palestine BenjaminNetanyahu
By Kaviarasan May 16, 2021 01:38 AM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஜா மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை, தேவையான வரை இந்த தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. காஜா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காஜா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காஜாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

சமீபத்தில், ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையிலான ஏற்பட்ட மோதல் காரணமாக, இஸ்ரேல், பாலிஸ்தீனத்தின் மீது ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஜாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஜாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் இதுவரை மொத்தம் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் காஜா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 145 பேரும், மேற்கு கரையில் 13 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாங்கள் தாக்குதலை நிறுத்தமாட்டோம்... இது தொடரும்! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டமான அறிவிப்பு | Benjamin Netanyahu Says Israeli Offensive

இதில் அப்பாவி மக்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் உறுதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் உண்மை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தான் இந்த மோதலுக்கான குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நாங்கள் அல்ல. காஜாவில் உள்ள ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மனநிலையிலேயே நாங்கள் இன்னும் உள்ளோம். காஜா மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை.

தேவையான வரை இந்த தாகுதல் தொடரும். பொதுமக்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பொதுமக்களுக்கு வேண்டுமென்றே தீங்கு இளைக்கும் ஹமாஸ் போன்று இல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அல்லது சிறிய அளவிலேயே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்டும் வகையில் பயங்கரவாதிகளை நேரடியாக தாக்குகிறோம் என்று கூறியுள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US