கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் வேலை செய்யத் துவங்கியுள்ளன: பெர்லின் மேயர்
ஜேர்மனி சமீபத்தில் அறிமுகப்படுத்திய கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், நல்ல விளைவுகளைக் கொடுக்கத் துவங்கியுள்ளன என்கிறார் பெர்லின் நகர மேயர்.
கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்
ஜேர்மனி சமீபத்தில் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவதும் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்நிலையில், ஜேர்மனி சமீபத்தில் அறிமுகப்படுத்திய கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், வேலை செய்யத் துவங்கியுள்ளதாக பெர்லின் நகர மேயரான Kai Wegner தெரிவித்துள்ளார்..
அகதிகள் வருகையால் ஏற்பட்ட அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதை காண்கிறோம் என்கிறார் அவர்.
பெர்லினுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை விட வெளியேறுபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.
அதன் காரணமாக, நகரத்தில் இப்போது அகதிகளுக்காக சுமார் 6,000 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |