அந்த மக்களே இலக்கு... பெர்லின் நகரை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி
பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணியைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் சிரிய இளைஞர், யூத மக்களைக் கொல்ல பல வாரங்களாகத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
19 வயது இளைஞர்
வெள்ளிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, தாக்குதல் நடத்திய 19 வயது இளைஞர் 30 வயதான ஸ்பானிஷ் சுற்றுலாப்பயணியை பின்னால் இருந்து நெருங்கி, பின்னர் அவரை கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தை அடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், கைகளிலும் ஆடைகளிலும் இரத்தக் கறைககளுடன் காணப்பட்ட நபரைக் கைது செய்தனர். பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,
சந்தேக நபர் தனது பையில் ஒரு பிரார்த்தனை கம்பளம், குர்ஆனின் நகல் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆயுதத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாக்குதலுக்கு இலக்கான நபர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார், ஆனால் அவரது உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் தற்போதைய நெருக்கடியான சூழலுக்கும் தொடர்புடைய தாக்குதலுக்கும் சாத்தியமான தொடர்புகளை ஆராய்ந்து வருவதாக பொலிசார் கூறுகின்றனர்.
தண்டிக்கப்பட வேண்டும்
ஆனால் இதுவரை எந்தவொரு குழுக்கள் அல்லது தனிநபர்களுடனும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், முன்னர் எந்த குற்றப் பதிவும் அந்த நபர் தொடர்பில் இல்லை என்பதுடன் அவர் குறித்து பொலிசாருக்கும் தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே ஜேர்மன் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவிக்கையில், சந்தேக நபர் சட்டத்தின் முழு பலத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்முறை குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்த அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |