ரூ.1 லட்சத்திற்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 125cc பைக்குகள்
இந்திய இருசக்கர வாகன சந்தையில் 125cc வகை, சாதாரண கம்யூட்டர்களுக்கும் ஸ்போர்ட்டி அனுபவம் தேடும் பயணிகளுக்கும் இடைப்பட்ட பிரிவாக வளர்ந்துள்ளது.
ரூ.1 லட்சத்திற்கு குறைவான விலையில், பல பைக்குகள் 11-12 bhp சக்தி, நவீன அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் கிடைக்கின்றன.
1- Hero Xtreme 125R

Hero Xtreme 125R 124.7cc என்ஜின் மூலம் 11.4 bhp மற்றும் 10.5 Nm டார்க் வழங்குகிறது. ஸ்போர்ட்டி வடிவமைப்பு, LED விளக்குகள் மற்றும் ரூ.89,000 (ex-showroom) விலையில் கிடைக்கிறது.
2- Honda SP 125

Honda SP 125 123.94cc என்ஜின் மூலம் 10.72 bhp சக்தியை வழங்குகிறது. 63 km/l வரை மைலேஜ் வழங்கும் இந்த பைக், ரூ.85,815 விலையில் கிடைக்கிறது. இதில் Digital display மற்றும் silent-start system போன்ற நவீன அம்சங்கள் உள்ளன.
3- Bajaj Pulsar 125

Bajaj Pulsar 125 124.4cc என்ஜின் மூலம் 11.63 bhp சக்தியை வழங்குகிறது. ரூ.79,048 விலையில் muscular design மற்றும் twin LED tail lamps கொண்டது. Pulsar பைக்கின் ஸ்போர்ட்டி தன்மையைத் தொடர்கிறது.
4- TVS Raider 125

TVS Raider 125 124.8cc என்ஜின் மூலம் 11.22 bhp மற்றும் 11.75 Nm டார்கை வழங்குகிறது. ரூ.80,500 விலையில் bold design, riding modes மற்றும் connectivity அம்சங்கள் கொண்டது.
5- Bajaj Pulsar N125

Bajaj Pulsar N125 124.59cc என்ஜின் மூலம் 11.83 bhp மற்றும் 11 Nm டார்கை வழங்குகிறது. ரூ.91,692 விலையில் sculpted tank, LED headlamp மற்றும் semi-digital cluster கொண்டுள்ளது.
இந்த பைக்குகள், பவர், ஸ்டைல் மற்றும் நவீன வசதிகளை ஒருங்கிணைத்து, சிறந்த விலையில் பயண அனுபவத்தை வழங்குகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
125cc bikes under 1 lakh India, best budget motorcycles 2025, Hero Xtreme 125R specs, Honda SP 125 mileage, Bajaj Pulsar 125 features, TVS Raider 125 price, Pulsar N125 launch details, top commuter bikes India, affordable sporty bikes 2025, 125cc motorcycle comparison