உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தை சிங்கப்பூர் இழந்தது. இப்போது இந்த விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது
உலகின் அனைத்து முன்னணி விமான நிலையங்களும் பயணிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் அதிநவீன அமைப்புகளை வழங்குவதில் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டியில் யார் முதலிடம் பெற்றுள்ளனர் என்பதை பாப்போம்.
உலகளாவிய தரவரிசை நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax survey) தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தை உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்துள்ளது.
தோஹா விமான நிலையம் 12 முறை சாம்பியனான சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளியது.
சாங்கி விமான நிலையத்திற்குப் பிறகு, தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அதனைத் தொடர்ந்து, டோக்கியோவின் ஹனேடா மற்றும் நரிடா விமான நிலையங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.
டெல்லி சர்வதேச விமான நிலையம் பட்டியலில் 36-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது மற்றும் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றது.
இந்தியா மற்றும் தெற்காசியாவிலேயே சிறந்த விமான நிலைய ஊழியர் சேவையாக ஹைதராபாத் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூரு விமான நிலையமும் சிறந்து விளங்குகிறது. இந்தியா மற்றும் தெற்காசியாவிலேயே சிறந்த பிராந்திய விமான நிலையமாக விருது பெற்றது. கடந்த ஆண்டு 69வது இடத்தில் இருந்து 10 இடங்கள் முன்னேறி 59வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகள், 1999 முதல் நடத்தப்பட்டு வருகின்றன, check-in, transfer experiences, immigration clearance, shopping மற்றும் departures உள்ளிட்ட பல வகைகளில் பயணிகளின் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2024-ல் உலகின் சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியல்
1. தோஹா ஹமத் விமான நிலையம், கத்தார் (Hamad International Airport)
2. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (Singapore Changi Airport)
3. சியோல் இன்சியான் விமான நிலையம், தென் கொரியா (Incheon International Airport)
4. டோக்கியோ ஹனேடா விமான நிலையம், ஜப்பான் (Haneda Airport)
5. டோக்கியோ நரிடா விமான நிலையம், ஜப்பான் (Narita International Airport)
6. பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம், பிரான்ஸ் (Paris Charles de Gaulle Airport)
7. துபாய் விமான நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் (UAE Dubai International Airport)
8. முனிச் விமான நிலையம், ஜெர்மனி (Munich International Airport)
9. சூரிச் விமான நிலையம், சுவிட்சர்லாந்து (Zurich International Airport)
10. இஸ்தான்புல் விமான நிலையம், துருக்கி (Istanbul International Airport)
Toyota-வின் புதிய Innova Hycross petrol GX (O) வகை கார் அறிமுகம்., அதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |