இங்கிலாந்தை அலற விட்ட 8 இந்திய பந்து வீச்சாளர்கள் - முதலிடம் இவர்தான்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து மண்ணில், வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களை விட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே சிறப்பாக செயல்படுவார்கள்.
அதன்படி, இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து பார்க்கலாம்.
கபில் தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ் இந்த பட்டியலில் 8வது இடம் வகிக்கிறார்.
1982 ஆம் ஆண்டு நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக மொத்தம் 168 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
லாலா அமர்நாத்
1946ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக, 167 ஓட்டங்களை கொடுத்து, 8 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அமர்நாத் இந்த பட்டியலில் 7வது இடம் வகிக்கிறார்.
முகமது சிராஜ்
2021ஆம் ஆண்டு நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மொத்தம் 126 ஓட்டங்களை கொடுத்து, 8 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், சிராஜ் இந்த பட்டியலில் 6வது இடம் வகிக்கிறார்.
பிஎஸ் சந்திரசேகர்
1971ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 114 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், சந்திரசேகர் இந்த பட்டியலில் 5வது இடம் வகிக்கிறார்.
ஜாகிர் கான்
2007ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 134 ஓட்டங்களை கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், ஜாகிர் கான் இந்த பட்டியலில் 4வது இடம் வகிக்கிறார்.
ஜஸ்பிரித் பும்ரா
2021ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 110 ஓட்டங்களை கொடுத்து, 9 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், பும்ரா இந்த பட்டியலில் 3வது இடம் வகிக்கிறார்.
சேதன் சர்மா
1986 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 188 ஓட்டங்களை கொடுத்து 10 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சேதன் சர்மா இந்த பட்டியலில் 2வது இடம் வகிக்கிறார்.
இங்கிலாந்து மண்ணில், 10 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை சேதன் சர்மா பெற்றுள்ளார்.
ஆகாஷ் தீப்
2025 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 187 ஓட்டங்களை கொடுத்து, 10 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், ஆகாஷ் தீப் இந்த பட்டியில் முதலிடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |