கனடாவில் கல்விக்கு என புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள்
உலக அளவில் கல்வியில் சிறந்துவிளங்கும் நாடுகளில் 4ம் இடத்தில் உள்ளது கனடா. பொதுவாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்களும் உயர்தர கல்விக்கு கனடாவையே தெரிவு செய்கின்றனர்.
கனடா முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கப்படுகிறது. மேலும் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களும் அமைந்துள்ளன, அவை அனைத்தும் பொது நிதியுதவி பெற்றவை.
2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் கனடா முழுவதும் 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தனியார் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன.
95 சதவிகித பல்கலைக்கழகங்களில் தங்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின் அடிப்படையில் கனடாவின் புகழ்பூத்த பலகலைக்கழகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
University of Ottawa
கனடாவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களில் 10வது இடத்தில் ஒட்டாவா பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளது. உலக அளவில் 203வது இடத்தில் இருக்கும் ஒட்டாவா பல்கலைக்கழகம், 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கு பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கனடாவிலேயே 12வது இடத்தில் உள்ளது.
McMaster University
9வது இடத்தில். உலக அளவில் 189வது இடத்தில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், வெளிநாட்டு ஆசிரியர்கள் தரவரிசையில் கனடாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் 93வது இடத்தில் உள்ளது.
ஒன்ராறியோவின் ஹாமில்டனில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம் மதிப்புமிக்க மருத்துவக் கல்விக்கு மிகவும் பிரபலமானதாகும்.
மலேசியாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
University of Calgary
கனடாவில் 8வது இடத்தில் தெரிவாகியுள்ளது கல்கரி பல்கலைக்கழகம். உலக அலவில் 182வது இடத்தில் உள்ளது. கல்கரி பல்கலைக்கழகம் 1944ல் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் கல்கரி கிளையாக நிறுவப்பட்டது.
அதன் பின்னர் 5 வளாகங்களுடன் தனியாகவே செயல்பட்டு வருகிறது கல்கரி பல்கலைக்கழகம். இதன் ஒரு வளாகம் கத்தார் தலைநகர் தோகாவில் அமைந்துள்ளது. 34,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகம் 250 க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
University of Montreal
1878ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழி பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். 10,000 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 67,000 மாணவர்களைக் கொண்டுள்ளது மாண்ட்ரீல் பல்கலைக்கழகம்.
Western University
கனடாவிலேயே அதிகம் தெரிவு செய்யப்படும் பல்கலைக்கழகங்களில் 6வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 114வது இடத்தில் உள்ளது. கனடாவின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்று.
மட்டுமின்றி மதிப்புமிக்க U15 ஆராய்ச்சி குழுவின் நிறுவன உறுப்பினர் இந்த Western பல்கலைக்கழகம். 1878ல் நிறுவப்பட்ட Western பல்கலைக்கழகத்தில் 43,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் சுமார் 10,000 சர்வதேச மாணவர்கள் 129 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
University of Waterloo
உலக அளவில் 112வது இடத்தில் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகமானது கனடாவில் 5வது இடத்தில் உள்ளது. 1956 நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகமானது U15 ஆராய்ச்சி குழுவின் உறுப்பினராகும்.
இலங்கையின் சிறந்த பல்கலைகழகங்கள் |
University of Alberta
கனடா உட்பட 156 நாடுகளைச் சேர்ந்த 44,000 மாணவர்கள் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். கனடாவிலேயே தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகம், உலக அளவில் 111வது இடத்தில் உள்ளது.
மொத்தமாக 5 வளாகங்களைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகமானது 200க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
The University of British Columbia
உலக அளவில் 34வது இடத்தில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், கனடாவில் 3வது இடத்தில் தெரிவாகியுள்ளது. கல்வி நற்பெயருக்கு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், கனடாவில் 2வது இடத்தில் உள்ளது.
70,000 மாணவர்கள் பயிலும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து இதுவரை 8 பேர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். மட்டுமின்றி, 65 பேர்கள் ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளனர் மற்றும் 74 பேர்கள் ரோட்ஸ் அறிஞர்கள்.
McGill University
மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகமானது 2ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. உலக அளவில் 30வது இடத்தில் உள்ளது. கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயின்ற பல்கலைக்கழகமிது.
மட்டுமின்றி, இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் 12 பேர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர், 145 பேர்கள் ரோட்ஸ் அறிஞர்கள் ஆவார்கள்.
University of Toronto
உலக அளவில் 21வது இடத்தில் இருக்கும் ரொறன்ரோ பல்கலைக்கழகம், கனடா மக்களின் முதல் தெரிவாக உள்ளது. ரொறன்ரோவில் மட்டும் மூன்று வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் 97,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நூலகங்கள் மட்டும் 42 செயல்படுகிறது. அத்துடன் 1,200 க்கும் மேற்பட்ட மாணவர் கிளப்புகள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது ரொறன்ரோ பல்கலைக்கழகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |