TOP 10 University in France: பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்கள்
பிரான்சின் படிக்க விரும்பும் மாணவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
Université Paris 1 Panthéon-Sorbonne
பிரான்சின் சிறந்த பல்கலைக்கழங்களின் பட்டியலில் 10வது இடத்திலும், உலகளவில் 328வது இடத்தையும் பிடித்துள்ளது Université Paris 1 Panthéon-Sorbonne.
1971ம் ஆண்டு இரண்டு பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் வணிகம், மனிதவளம், அரசியல் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
Sciences Po
பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களில் 9வது இடத்திலும், உலகளவில் 319வது இடத்தையும் பிடித்துள்ளது Sciences Po.
சட்டம், பொருளாதாரம், சமூகஅறிவியல், அரசியல், வரலாறு மற்றும் அது தொடர்பான பாடங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
இங்கு பயிலும் 14000 மாணவர்களில் 50 சதவிகிதம் பேர் வெளிநாட்டில் இருந்து வருகை புரிந்தவர்களே, 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.
வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உலகளவில் 55வது இடத்தை பிடித்துள்ளது Sciences Po.
Université Grenoble Alpes
பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் 8வது இடத்திலும் உலகளவில் 294வது இடத்திலும் இருக்கிறது Université Grenoble Alpes.
சர்வதேச ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதால் உலகளவில் 64வது இடத்தை பெற்றுள்ளது.
Valence நகரில் 1339ம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், சமூகஅறிவியல் மற்றும் வணிகம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
Université Paris Cité
உலகளவில் 236வது இடத்தை பிடித்துள்ள Université Paris Cité, பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இங்கு ஆராய்ச்சிகளுக்காக தனியாக அமைக்கப்பட்ட மையம் ஒன்று, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞான அறிவியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது.
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
மிக முக்கியமாக உடல்நலம், அறிவியல் மற்றும் மனிதநேயம் தொடர்பான பாடங்களில் கவனம் செலுத்துவதால் அதுதொடர்பான மேலதிக கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
École des Ponts ParisTech
தொடர்ந்து 4வது முறையாக பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ள École des Ponts ParisTech, உலகளவில் 192வது இடத்தை பெற்றுள்ளது.
1747ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், மிகச்சிறந்த பொறியியலாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.
கல்வி மட்டுமின்றி புதிதான தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துகிறது.
2000 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவரின் திறனும் கண்காணிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
École Normale Supérieure de Lyon
உலகளவில் 184வது இடத்தை பிடித்துள்ள École Normale Supérieure de Lyon, பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மனிதநேயம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களில் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான இது ஒரு பொதுபல்கலைக்கழகம் ஆகும்.
இதன்காரணமாக இயற்பியல், கணிதம், கணனி அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் உட்பட பல பிரிவுகளில் ஆர்வமுள்ள பலரும் தங்களது ஆராய்ச்சிகளை இங்கு மேற்கொள்கின்றனர்.
ENS Paris-Saclay
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது ENS Paris-Saclay.
உலகளவில் 71வது இடத்தை தனதாக்கி கொண்டுள்ள இப்பபல்கலைக்கழகத்தில் அறிவியில் மற்றும் பொறியியல் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதுதவிர வாழ்க்கை முறைக்கான அறிவியல், உடல்நலம் மற்றும் சமூக அறிவியில் தொடர்பான பாடங்களும் உண்டு.
இப்பல்கலைக்கழகம் ஐரோப்பிய மற்றும் உலகளவில் முக்கியமான ஒன்றாகும்.
Sorbonne University
உலகளவில் 59வது இடத்தை பிடித்துள்ள Sorbonne University, பிரான்சின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது.
சர்வதேச ஆராய்ச்சிகளை ஒப்பிடும் போது உலகளவில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
கனடாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
2018ம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டாலும், Paris-Sorbonne University மற்றும் Pierre et Marie Curie University-ன் இணைப்பால் உலகளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது.
Institut Polytechnique de Paris
பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் 2வது இடத்தில் அமைந்திருக்கும் Institut Polytechnique de Paris, உலகளவில் 38வது இடத்தில் இருக்கிறது.
பாரிஸ் நகரில் இருந்து 30கி.மீ தொலைவில் 120 ஹெக்டேர் பரப்பளவில் மாணவர்களுக்கு மிகச்சிறந்த கட்டமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளது Institut Polytechnique de Paris.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்க மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தை தெரிவு செய்கின்றனர்.
Université PSL (Paris Sciences & Lettres)
பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ள Université PSL , உலகளவில் 24வது இடத்தில் உள்ளது.
9 கல்லூரிகள் ஒன்றிணைந்து 2010 ம்ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
சர்வதேச ஆராய்ச்சிகளுக்கான தரப்பட்டியலில் உலகளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |