TOP 10 University in UK: பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்கள்
வெளிநாடுகளில் தங்களது கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன பிரித்தானிய பல்கலைகழகங்கள்.
உலகளவில் 50 சிறந்த பல்கலைகழகங்களின் பட்டியலில் 20 பல்கலைகழகங்கள் பிரித்தானியாவில் அமைந்துள்ளது.
கற்பித்தல் மட்டுமின்றி சர்வதேச ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கவும், உயர்தர நிறுவனங்களில் இணைந்து பணியாற்றவும் மாணவர்களுக்கு ஏற்ற வழிவகைகளை செய்து கொடுக்கிறது.
இந்த பதிவில் முதல் 10 இடங்களை பிடித்த பிரித்தானியா பல்கலைகழகங்கள் குறித்து பார்க்கலாம்.
10. The University of Warwick
பிரித்தானியாவில் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 10வது இடத்திலும், உலகளவில் 67வது இடத்திலும் உள்ளது The University of Warwick.
1965ம் ஆண்டு தொடங்கப்பட்ட குறித்த பல்கலைகழகம், 50 ஆண்டுகளில் கல்வியில் முன்னேற்றம் கண்டு உலகளவில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது.
இங்கு படிக்கும் மாணவர்களில் 42 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டு மாணவர்களே, 150 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர்.
சிறந்த கல்வியை வழங்குவதோடு மட்டுமின்றி 40 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களின் எதிர்காலத்தையும் வளமையானதாக மாற்றுகிறது The University of Warwick.
9. University of Bristol
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்களில் 9வது இடத்தையும், உலளகவில் 58வது இடத்தையும் பிடித்துள்ளது University of Bristol.
1876ம் ஆண்டு முதல் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் இணைந்து கல்விகற்கும் முறையை கொண்டு வந்த முதல் பல்கலைகழகம் இதுவாகும்.
கல்வியை கற்றுக்கொடுப்பதுடன் நின்றுவிடாமல் மாணவர்கள் சுயமாக சிந்தித்துச் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
சுய மதிப்பீடுகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவும், Bristol நகருக்குள் மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும் அனுமதியும் வழங்குகிறது.
8. London School of Economics and Political Science
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 8வது இடத்தையும், உலகளவில் 45வது இடத்தையும் பிடித்துள்ளது London School of Economics and Political Science.
வெளிநாட்டு மாணவர்கள் இலகுவாக கல்வி கற்பதற்கான சூழலையும், அதற்கான வழிமுறைகளையும் திறம்பட உருவாக்கியுள்ளது LSE.
கிழக்கு- தெற்காசிய நாடுகள், வடக்கு அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.
60 சதவிகிதத்துக்கும் மேலாக வெளிநாட்டு மாணவர்களை கொண்ட கல்வி நிறுவனம் இதுவாகும்.
7. King’s College London
பிரித்தானியாவில் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 7வது இடத்திலும், உலகளவில் 40வது இடத்தையும் பிடித்துள்ளது King’s College London.
சர்வதேச அளவில் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளை திறம்பட வழங்கியுள்ளதால் உலகளவில் பிரபலமாக திகழ்கிறது KCL.
இதன்காரணமாக பிரித்தானியாவின் ஆராய்ச்சி துறைக்கான விருதுகளையும் தனதாக்கி கொண்டுள்ளது.
6. The University of Manchester
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 6வது இடத்தையும், உலகளவில் 40வது இடத்தையும் பிடித்துள்ளது The University of Manchester.
இங்கிலாந்தின் தொழில்துறை பாரம்பரியத்துடன் மிக நெருக்கமாக இணக்கம் கொண்டுள்ள இப்பல்கலைகழகம் முதல் Civic University ஆகும்.
மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமின்றி அவர்கள் சிறப்பான வேலைகளை பெறவும் தேவையான வழிவகைகளை செய்து கொடுக்கிறது. தங்களது பாடத்திட்டத்துடன் இணைந்து மாணவர்கள் தன்னார்வ பணியை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.
5. University of Edinburgh
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 5 வது இடத்திலும், உலகளவில் 22வது இடத்தையும் பிடித்துள்ளது University of Edinburgh.
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள இப்பல்கலைகழகம், சர்வதேச ஆராய்ச்சியில் உலகளவில் சிறந்து விளங்குகிறது.
பிரித்தானியாவின் மிகச்சிறந்த sustainable university என்ற பெயரை பெற்றுள்ள இப்பல்கலைகழகம், 2040ம் ஆண்டுக்குள் கார்பன் முற்றிலும் நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது.
4. University College London
பிரித்தானியாவில் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 4வது இடத்திலும், உலகளவில் 9வது இடத்திலும் இருக்கிறது University College London.
உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் பல்கலைகழகம் இதுவே, இதுமட்டுமின்றி சர்வதேச ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
சர்வதேச ஆராய்ச்சி பணிகளை மேலும் மேம்படுத்தும் வண்ணம் புதிய அலுவலகம் ஒன்றையும் நிறுவியுள்ளது, இதன்மூலம் மாணவர்களின் ஆராய்ச்சி எளிதாக பொதுமக்களை சென்றடையும்.
3. Imperial College London
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகமான Imperial College London, உலகளவில் 6வது இடத்தை பெற்றுள்ளது.
அறிவியல், பொறியியல், மருத்துவம், வணிகம் போன்ற துறைகளில் மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்குவதே இப்பல்கலைகழகத்தின் முதன்மையான நோக்கமாகும்.
மிக முக்கியமாக பெண்களை இத்துறையின் வல்லுநர்களாக மெருகேற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
2. University of Oxford
உலகளவில் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தையும், பிரித்தானியாவின் 2து இடத்தையும் பிடித்துள்ளது University of Oxford.
இங்கிலாந்தின் மிகப்பழமையானதும், 1096ம் ஆண்டுகளிலேயே கற்பித்தலை தொடங்கிய பல்கலைகழகம் இது என கூறப்படுகிறது.
36 கல்லூரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பே இப்பல்கலைகழகம் ஆகும்.
1. University of Cambridge
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது University of Cambridge.
உலகளவில் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள இப்பல்கலைகழகம், 1209 ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
31 கல்லூரிகளின் ஒருங்கிணைப்பான University of Cambridge, 47 உலகத் தலைவர்களையும், 210 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீரர்- வீராங்கனைகளையும் உருவாக்கியுள்ளது.
121 நோபல் பரிசுகளை வென்ற விஞ்ஞானிகள் கல்வி பயின்றது University of Cambridge- ல் தான் என்பது பெருமையான தகவலாகும்.