Top 10 University in Germany: ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழங்கள்
ஜேர்மனியில் சிறந்த விளங்கும் 10 பல்கலைகழகங்களுக்கான பட்டியல்
Universität Hamburg
ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 10 வது இடத்தையும் உலகளவில் 205வது இடத்தையும் பெற்றுள்ளது Universität Hamburg.
1919ம் ஆண்டு Weimar ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்கலைகழகம் இதுவாகும். தற்போது 43000 மாணவர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்பல்கலைகழகத்தில் 150க்கும் மேற்பட்ட படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
Albert-Ludwigs-Universtaet Freiburg
நகரின் மிக முக்கிய பகுதியில் அமையப்பெற்றுள்ள Albert-Ludwigs-Universtaet Freiburg பல்கலைகழகம், பொறியியல், மருத்துவம் தொடர்பான பாடங்களை கற்றுக்கொடுக்கிறது.
ஐரோப்பாவிலேயே அதிகளவான மருத்துவ வசதிகள் கொண்ட இப்பல்கலைகழகத்தில் தற்போது 24000 பேர் பயில்கின்றனர்.
இங்குள்ள சூழலில் பயிலும் மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கத் தவறவில்லை.
ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 9வது இடத்திலும் உலகளவில் 192வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Technische Universität Berlin
உலகளவில் 154வது இடத்தை பிடித்துள்ள இப்பல்கலைகழகம், ஜேர்மனியில் 8வது இடத்தை பெற்றிருக்கிறது.
ஜேர்மனியின் முதல் தொழில்நுட்ப பல்கலைகழமான Technische Universität Berlin, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
எதிர்கால சந்ததியினருக்கு சுமையை அதிகரிக்காமல் தற்கால சவால்களை ஏற்று நிலையான வளர்ச்சி கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயில்வதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
Humboldt-Universität zu Berlin
உலகளவில் 120வது இடத்தை பிடித்துள்ள Humboldt-Universität zu Berlin, ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது.
1810ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைகழகம், அனைத்து பல்கலைகழகங்களுக்குமான முன்னோடி என்றழைக்கப்படுகிறது.
1914 முதல் 1933ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இங்கு உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
KIT, Karlsruher Institut für Technologie
தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் ஆகியவற்றில் உலகளாவிய சவால்களுக்கு ஏற்றவாறு தங்களது பங்களிப்பை வழங்குவதையே நோக்கமாக கொண்டுள்ளது KIT.
மேலும் 22,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை தொழில்முறை வாழ்க்கைக்கு தயார்படுத்த ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்பை வழங்குகிறது.
உலகளவில் 119வது இடத்தை பெற்றுள்ள KIT, ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழங்களுக்கான பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
Rheinisch-Westfälische Technische Hochschule Aachen
ஜேர்மனியின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைகழகமான RWTH Aachen, 170க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
இங்கு படிக்கும் 47,000 பேரில் 14,000 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை, மாணாக்கர்களை உருவாக்குவதே நோக்கமாகும்.
பிரான்சின் சிறந்த பல்கலைகழகங்கள் |
ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 5வது இடத்திலும், உலகளவில் 106வது இடத்தையும் பெற்றுள்ளது.
Freie Universität Berlin
1948ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைகழகம் ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 4வது இடத்தை பெற்றுள்ளது.
அறிவியல் தொடர்பான பிரிவுகளில் சிறந்து விளங்கும் இப்பல்கலைகழகம் உலகளவில் சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்கான நன்மதிப்பை பெற்று 87வது இடத்தில் நீடிக்கிறது.
பல்கலைகழகம் தொடங்கப்பட்ட காலத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிளவுபட்ட சோவியத் நகரில் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை வெளிப்படையாக விமர்சித்தனர், இது அக்காலத்தில் சர்வதேச கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Universität Heidelberg
ஜேர்மனியின் மிகப்பழமையான பல்கலைகழமான இது 1386ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியின் மூன்றாவது இடத்திலும், உலகளவில் 87வது இடத்திலும் நீடிக்கிறது.
150க்கும் மேற்பட்ட படிப்புகள் இங்கு கற்றுக்கொடுப்பதுடன் 30,000க்கும் மேற்பட்ட பயில்கின்றனர்.
Ludwig-Maximilians – Universität München
கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் 500 வருட அனுபவத்தை கொண்டுள்ள Ludwig-Maximillians-Universität München ஐரோப்பாவின் முன்னணி ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும்.
கனடாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
ஜேர்மனியின் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 2வது பெற்றுள்ளதுடன், உலகளவில் 54வது இடத்தில் நீடிக்கிறது.
Technische Universität München
வணிகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான படிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கப்பட்ட Technische Universität München, உலகளவில் சிறந்த பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் 37வது இடத்தில் உள்ளது.
ஜேர்மனியின் மிகச்சிறந்த பல்கலைகழகம் என்ற பெயரை பெற்றுள்ளதுடன், TU9 ன் உறுப்பினரும் கூட.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் புதுப்புது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு ஆகச்சிறந்த சூழலை உருவாக்குவதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |