வரலாற்று அதிசயங்களுக்கு மத்தியில் கல்வி: இத்தாலியின் டாப் 5 பல்கலைக்கழகங்கள் இதோ!
வரலாற்று அதிசயங்களுக்கும், கலாச்சார செழுமைக்கும் பெயர் பெற்ற இத்தாலி, மிகச் சிறந்த கல்வித் துறையையும் கொண்டுள்ளது.
கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வணிகம் என பல்வேறு துறைகளில் இத்தாலிய பல்கலைக்கழகங்கள் சிறந்து வழங்குகின்றன.
பல ஐரோப்பிய நாடுகளை விட இத்தாலியில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால் இது சர்வதேச மாணவர்களுக்கு ஈர்க்கும் விருப்பமாக உள்ளது.
சர்வதேச மாணவர்கள் எளிதாக இணைவதற்காக ஆங்கிலத்தில் கற்பிக்கும் பாடத்திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
போலோக்னா பல்கலைக்கழகம்(University of Bologna)
1088 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனம், மேற்குலகில் தொடர்ந்து இயங்கி வரும் பழமையான பல்கலைக்கழகம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
போலோக்னா பல்கலைக்கழகம், மருத்துவம், சட்டம், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் சிறந்த படிப்புகளை வழங்குகிறது.
வடக்கு இத்தாலிய நகரமான போலோக்னாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் செழுமையான வரலாறு, மாணவர் வாழ்க்கை, ஒப்பற்ற கல்வி மற்றும் கலாச்சார அனுபவத்தை வழங்குகிறது.
இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்நாட்டு அளவில் முதல் இடத்தையும், உலக அளவில் 130வது இடத்தையும் பெற்றுள்ளன.
அறிக்கையின் தகவல்படி, போலோக்னா பல்கலைக்கழகம் உள்நாட்டு அளவில் 1வது இடத்திலும், 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 130 வது இடத்திலும் உள்ளது.
பதுவா பல்கலைக்கழகம்(University of Padua)
1222 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகம் மருத்துவ மற்றும் அறிவியல் துறைகளில் முன்னிலையில் உள்ளது.
பதுவா பல்கலைக்கழகம் பலதரப்பட்ட மற்றும் சர்வதேச மாணவர் சமூகத்தை ஊக்குவிக்கிறது, இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சகாக்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு செழுமையான கற்றல் சூழலை உருவாக்குகிறது.
அறிக்கையின் தகவல்படி, பதுவா பல்கலைக்கழகமும் உள்நாட்டு அளவில் 1வது இடத்திலும், 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 130 வது இடத்திலும் உள்ளது.
ரோம் சபீன்சா பல்கலைக்கழகம்(Sapienza University of Rome)
1303 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ள சபீன்சா பல்கலைக்கழகம் ரோமின் இதய பகுதியில் அமைந்துள்ளது.
இது வானவியல், விண்வெளி இயற்பியல் போன்ற அறிவியல் துறைகளிலும், பொறியியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளிலும் விரிவான படிப்புகளை வழங்கி உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களை ஈர்க்கிறது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 3வது இடத்திலும்,, ரோம் சபீன்சா பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 140 வது இடத்திலும் உள்ளது.
மிலன் பல்கலைக்கழகம்(University of Milan)
1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், சட்டம் மற்றும் பொருளாதாரம் முதல் மருத்துவம் மற்றும் மானிடவியல் வரையிலான பல்வேறு துறைகளைக் கொண்டுள்ளது.
மிலன் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.
இத்தாலியின் நிதி மற்றும் வர்த்தக மையமான மிலனின் மையத்தில் அமைந்துள்ள மிலன் பல்கலைக்கழகம், துடிப்பான மற்றும் பன்னாட்டு சூழலில் சிறப்பான பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 4வது இடத்திலும்,, மிலன் பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 146 வது இடத்திலும் உள்ளது.
பாலிடெக்னிகோ டி மிலானோ(Politecnico di Milano)
1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாலிடெக்னிகோ டி மிலானோ பல்கலைக்கழகம் எதிர்கால பொறியாளர்கள், கட்டிட கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான சிறந்த கற்றல் இடமாகும்.
பாலிடெக்னிகோ டி மிலானோ பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன ஆராய்ச்சி வசதிகள் மற்றும் வலுவான தொழில் துறை இணைப்புகள் ஆகியவை, பட்டதாரிகள் சிறப்பான தொழில்களுக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கின்றன.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 12வது இடத்திலும், பாலிடெக்னிகோ டி மிலானோ 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 317 வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |