மலேசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? விவரங்கள் உள்ளே
நீங்கள் மலேசியாவில் படிப்பதற்கான சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை என்பதையும், அதை பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.
ஆசியாவின் வளர்ந்து வரும் சர்வதேச ஆய்வு மையங்களில் ஒன்றான மலேசியா, சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான தேர்வாக உள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் 250,000 சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே உலகளாவிய தரவரிசையில் வலுவான முன்னிலையில் உள்ளது. QS World University Rankings 2024 அடிப்படையில் மலேசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
உலக தரவரிசை அடிப்படையில் பட்டியல்
1.மலாயா பல்கலைக்கழகம் (Universiti Malaya)
2.மலேசியாவின் அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia (USM)
3.மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (Universiti Putra Malaysia (UPM))
4. மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (Universiti Kebangsaan Malaysia)
5. Universiti Teknologi Malaysia
6.டெய்லர் பல்கலைக்கழகம் (Taylor's University)
7.UCSI பல்கலைக்கழகம் (UCSI University)
8.மலேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Universiti Teknologi PETRONAS)
9.மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம் (Universiti Utara Malaysia)
10. மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA (UiTM) Shah Alam)
* Universiti Malaya (UM)
உலக தரவரிசையில் 65 -வது இடத்தில் இருக்கும் மலாயா பல்கலைக்கழகம் Universiti Malaya (UM) ஒரு மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். இது 1949 -ம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது அண்டை நாடான சிங்கப்பூரில் இருக்கும் பல கல்லூரிகளின் இணைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது 14,580 க்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் மற்றும் 13,700 க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகளின் சேர்க்கையுடன் முழு பாட படிப்புகளை வழங்குகிறது.
குறிப்பாக இங்கு தமிழ் மொழிப் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. அதாவது இரண்டு புலங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது.
* Universiti Sains Malaysia (USM)
உலக தரவரிசையில் 137-வது இடத்தில் இருக்கும் மலேசியாவின் அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia (USM)) பரந்த பாடத்தை உள்ளடக்கிய பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும்.
இந்த பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது. அதில் முக்கிய வளாகம் பினாங்கு தீவிலும், சுகாதார வளாகம் கிளந்தனிலும், பொறியியல் வளாகம் நிபோங் டெபாலிலும் உள்ளது.
கனடாவின் சிறந்த பல்கலைகழகங்கள் |
* Universiti Putra Malaysia (UPM)
உலக தரவரிசையில் 158-வது இடத்தில் இருக்கும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் Universiti Putra Malaysia (UPM) ஒரு மற்றொரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும்.
இது கோலாலம்பூரின் தெற்கே செர்டாங் நகரில் அமைந்துள்ளது. முதலில் விவசாயக் கல்லூரியாக நிறுவப்பட்ட யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா, விவசாயம் மற்றும் வனவியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் வலுவான கவனம் செலுத்துகிறது.
* Universiti Kebangsaan Malaysia (UKM)
உலக தரவரிசையில் 159-வது இடத்தில் இருக்கும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (Universiti Kebangsaan Malaysia) ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும்.
கோலாலம்பூரின் தெற்கே சிலாங்கூர் பகுதியில் உள்ள சிறிய நகரமான பாங்கியில் அதன் முக்கிய வளாகம் உள்ளது.
* Universiti Teknologi Malaysia
உலக தரவரிசையில் 188-வது இடத்தில் இருக்கும் Universiti Teknologi Malaysia ஒரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பொது நிறுவனம் ஆகும்.
இந்த பல்கலைக்கழகம் இரண்டு முக்கிய வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று கூட்டாட்சித் தலைநகர் கோலாலம்பூரிலும், மற்றொருன்று மலேசிய நிலப்பரப்பின் தெற்கு முனையில் உள்ள ஜோகூர் பாருவிலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |