ரீயூனியனில் இருக்கும் சிறப்பான பல்கலைக்கழகம்.., உங்களுக்கான கல்வி இதோ!
உங்களது கனவு கல்வியை நீங்கள் ரீயூனியனில் தேடிக்கொண்டிருந்தால் அங்கு இருக்கும் பல்கலைக்கழகத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தரமான உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களை தேடி கொண்டிருப்பார்கள். அதில் நாம் இப்போது ரீயூனியனில் இருக்கும் பல்கலைக்கழகத்தை பற்றி இந்த பார்க்கலாம்.
ரீயூனியன் பல்கலைக்கழகம்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவான ரீயூனியனில் (Réunion) குறைவான மக்கள்தொகையே உள்ளது. இங்கு, குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இங்கு, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியனில் இருக்கும் லா ரீயூனியன் பல்கலைக்கழகத்தை கீழே பார்க்கலாம்.
லா ரீயூனியன் பல்கலைக்கழகம் (University of La Réunion)
1960 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட லா ரீயூனியன் பல்கலைக்கழகம் (Université de La Réunion) ஒரு இலாப நோக்கற்ற பொது உயர்கல்வி நிறுவனமாகும். இது சிறிய நகரமான Saint Denis -ல் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகமானது பிரான்ஸ் நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இங்கு, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பட்டங்களுக்கு வழிவகுக்கும் படிப்புகள் மற்றும் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
அதாவது இளங்கலை பட்டங்கள், முதுகலை பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டங்கள் போன்ற பல படிப்புகள் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு நூலகம், வெளிநாட்டில் கல்வி, பரிமாற்றத் திட்டங்கள், நிர்வாகச் சேவைகள் உள்ளிட்ட பல கல்வி மற்றும் கல்விசாரா வசதிகளை Université de la Reunion வழங்குகிறது.
மேலும், இங்கு பிரெஞ்சு மொழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன் வளாகங்கள் செயிண்ட் டெனிஸ், லா தாம்பன், செயிண்ட் பியரே ஆகிய இடங்களில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |