Best University in Switzerland: சுவிட்சர்லாந்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள்
சுவிட்சர்லாந்தில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சுவிட்சர்லாந்து தரவரிசை | உலக தரவரிசை | பல்கலைக்கழகம் | அமைந்துள்ள இடம் |
1 | 11 | ETH Zurich | Zurich |
2 | 33 | École Polytechnique Fédérale de Lausanne | Lausanne |
3 | 80 | University of Zurich | Zurich |
4 | =116 | University of Bern | Bern |
5 | =123 | University of Basel | Basel |
5. University of Basel
University of Basel 1460 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்த பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகவும் உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் சர்வதேச மாணவர்களாவர்.
பல்கலைக்கழகத்தில் மொத்தமாக ஏழு பீடங்கள் உள்ளன. இறையியல், சட்டம், மருத்துவம், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், அறிவியல், வணிகம் மற்றும் பொருளாதாரம் மற்றும் உளவியல் ஆகும்.
மேலதிக தகவல்களுக்கு குறித்து தளத்திற்குள் உட்பிரவேசிக்கவும். University of Basel
மலேசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் |
4. University of Bern
University of Bern சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்னில் அமைந்துள்ளது. இதன் பீடங்கள் அனைத்தும் Länggasse பகுதியில் அமைந்துள்ளது.
இது நகரத்தின் கல்விப் பகுதியாக பார்க்கப்படும் ஒரு பகுதியாகும். 1908 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவார்த்த இயற்பியலைக் கற்பித்தார். அடுத்த ஆண்டு ரஷ்ய தத்துவஞானி அன்னா டுமர்கின் பேராசிரியரானார்.
மேலதிக தகவல்களுக்கு குறித்து தளத்திற்குள் உட்பிரவேசிக்கவும். University of Bern
கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் |
3. University of Zurich
University of Zurich சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச் (Zurich) நகரில் அமைந்துள்ளது. இதுவே சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும்.
பல்கலைக்கழகத்தில் ஏழு பீடங்கள் உள்ளன. இறையியல், சட்டம், வணிகம், பொருளாதாரம் மற்றும் தகவல், மருத்துவம், கலை மற்றும் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவம் என்பவை ஆகும்.
இளங்கலை பட்டப்படிப்புகள் ஜெர்மன் மொழியில் கற்பிக்கப்படுகின்றன. மேலும் அனைத்து முதுகலை பட்டங்களுக்கு ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு குறித்து தளத்திற்குள் உட்பிரவேசிக்கவும். University of Zurich
இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்கள் |
2. École Polytechnique Fédérale de Lausanne
École Polytechnique Fédérale de Lausanne ஒரு உயர் சர்வதேச பல்கலைக்கழகமாகும். அதன் மாணவர்களில் பாதி பேர் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள்.
இது இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் நிபுணத்துவம் பெற்றதாகும். குறித்த பல்கலைக்கழகமானது ஆராய்ச்சி வெளியீட்டிற்காக உலகம் முழுவதும் நன்கு மதிக்கப்படுகிறது.
ஜெனிவா ஏரிக்கு அருகில் இந்த வளாகம் அமைந்துள்ளது மற்றும் இது முழுவதுமாக நீர்மின்சாரத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் இயக்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு குறித்து தளத்திற்குள் உட்பிரவேசிக்கவும். École Polytechnique Fédérale de Lausanne
பிரித்தானியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் |
1. ETH Zurich
1855 ஆம் ஆண்டில் ETH Zurich பள்ளியாக நிறுவப்பட்டது. பின்னர் உலகின் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறியது.
நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் நன்கு அறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட 20 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழத்தில் தான் படித்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு குறித்து தளத்திற்குள் உட்பிரவேசிக்கவும். ETH Zurich
ஜேர்மனியின் சிறந்த பல்கலைக்கழகங்கள் |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |