'ஓப்பன்ஹெய்மர்' படத்தில் நெருக்கமான காட்சிகளில் பகவத் கீதை வசனம்! வலுக்கும் எதிர்ப்பு
ஹாலிவுட் திரைப்படமான 'ஓப்பன்ஹெய்மர்' படத்தில் நெருக்கமான காட்சிகளில் பகவத் கீதை வசனம் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
சர்ச்சைக்குரிய காட்சியில் பகவத் கீதை வசனம்?
ஹாலிவுட்டில் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பில் உருவான படம் 'ஓப்பன்ஹெய்மர்'. சிலியன் மர்பி நடித்த இந்த படம் கடந்த 21 ஆம் திகதி வெளியானது.
இந்த படமானது, அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
உண்மையான அணு ஆயுத சோதனையை கொண்டு இந்த படம் தத்ரூபமாக எடுக்கப்பட்டதால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியானது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் பெண் ஒருவர் பாலியல் உறவில் இருக்கும் சமயத்தில் ஓப்பன்ஹெய்மர் கதாநாயகன் பகவத் கீதை வசனத்தை பேசுவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அதாவது, 'இந்த உலகத்தை அழிப்பவன் நான்' என்று கூறும் பகவத் கீதையில் உள்ள வசனம் இடம் பெற்றிருப்பதால் இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க நோலனுக்கு கோரிக்கை
இந்நிலையில், இந்திய தகவல் ஆணையர் உதய் மஹூர்கர், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குமாறு இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு கூறியுள்ளார்.
அதாவது, ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையில், தேவையற்ற காட்சிக்கு பின்னால் இருக்கும் லாஜிக் எங்களுக்கு தெரியாது. ஆனால், இது ஒட்டு மொத்த இந்து மக்களின் மீது நேரடி தாக்குதலாகவும், இந்து சமூகத்தின் மீது போர் தொடுக்கும் வகையிலும் உள்ளது என ட்விட்டரில் கூறியுள்ளார்.
. @OppenheimerATOM
— Uday Mahurkar (@UdayMahurkar) July 22, 2023
To,
Mr Christopher Nolan
Director , Oppenheimer film
Date : July 22, 2023
Reg: Film Oppenheimer’s disturbing attack on Hinduism
Dear Mr Christopher Nolan,
Namaste from Save Culture Save India Foundation.
It has come to our notice that the movie…
விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் முதன்முறையாக அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்த பின்பு, பகவத் கீதையில் உள்ள வசனத்தை நினைவு படுத்திக் கொண்டார். அதாவது, "இளவரசர் அர்ஜுனன் தனது கடமைகளை செய்ய வேண்டும் என்று விஷ்ணு கூறியிருந்தார். அப்போது, விஷ்ணு பல கைகளுடன் தோன்றி உலகை அழிக்கக்கூடிய மரணம் ஆகிவிட்டேன் எனக் கூறினார்" என்பதை அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தணிக்கை குழு மீது நடவடிக்கை
மேலும், இந்தியாவின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஓப்பன்ஹெய்மர் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தணிக்கை குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |