தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்யும் முதல்வர்!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் குர்ப்ரீத் சிங் என்னும் மருத்துவரை இன்று திருமணம் செய்ய உள்ளார்.
48 வயதாகும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திருமணம் பற்றிய தகவல் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களான இவர்களது திருமணம் பாரம்பரிய சீக்கிய முறையில் குருத்வாராவில் நடைபெற உள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பகவந்த் மான் மருத்துவர் குர்ப்ரீத் சிங்கை சந்தித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இவர் உள்பட சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். வேறு எவருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தனது முதல் மனைவி இந்தர் ப்ரீத் கவுருடன் பகவாந்த் மானுக்கு 2015ஆம் விவாகரத்து ஆன நிலையில், இவர்களது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவில் தங்களது தாயுடன் வசித்து வருகின்றனர்.
32 வயதான குர்ப்ரீத் சிங் பகவாந்தை விட 16 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.