வன்முறையை வேடிக்கை பார்க்கும் உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்: பனுகா ராஜபக்சா
கொழும்பில் வன்முறை குறித்து இலங்கை கிரிக்கெட் வீர பனுகா ராஜபக்சா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் பனுகா ராஜபக்சா கொழும்பில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து, முன்னாள் வீரர் சங்ககாரா வெளியிட்ட ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பனுகா ராஜபக்சா தனது ட்விட்டர் பதிவில், 'வீட்டிற்கு திரும்பி வந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைகிறேன். பொலிசாரும், மற்ற பாதுகாப்பு படையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Shocked and saddened to see violence unleashed on peaceful protestors back home. All while the police and other security personnel just watched on. Shame on you all. https://t.co/jgz1JsKJOl
— Bhanuka Rajapaksa (@BhanukaRajapak3) May 9, 2022