Fortuner-க்கு போட்டியாக புதிய SUV காரை அறிமுகப்படுத்திய MG
Toyota Fortuner-க்கு போட்டியாக புதிய SUV காரை MG Motors அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்றுவரும் AutoExpo 2025-இல் JSW MG Motor India நிறுவனம் Magestor எனும் SUV காரை காட்சிப்படுத்தியுள்ளது.
இது MG Gloster-ன் facelift மொடலாகும், ஆனால் Magestor அதற்கு மேலே நிலைநிறுத்தப்படும். இரண்டு மாடல்களின் விற்பனையும் தொடரும் என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
MG இன்னும் Magestor SUV குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் Magestor-ன் வடிவமைப்பு தென்னாப்பிரிக்கா போன்ற சந்தைகளில் விற்கப்படும் Max D90 SUVயைப் போன்று இருக்கும் என கூறப்படுகிறது.
Gloster-ன் விலை ரூ.39.57 லட்சம் முதல் ரூ.44.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது, எனவே மேஜெஸ்டரின் விலையும் பிரீமியமாக இருக்கும்.
Magestor கார் Toyota Fortuner, Jeep Meridian, Skoda Kodiaq மற்றும் Nissan X-Trail உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.
Magestor SUV blacked-out grille மற்றும் வழக்கத்தை விட பெரிய MG லோகோவைப் பெறுகிறது.
panoramic sunroof, hot, cooled and massaging driver seat with power adjustment, heated passenger seat, three-zone climate control, wireless phone charging, 12-speaker audio system மற்றும் electric tailgate போன்ற அம்சங்களை குளோஸ்டர் பெறுகிறது. எனவே, இந்த அம்சங்கள் மேக்ஸ்டரிலும் கிடைக்கும் என்று ஊகிக்க முடியும்.
பாதுகாப்பு அம்சங்களில் level 2 ADAS, 360 டிகிரி கேமராக்கள், auto headlamps மற்றும் wipers, tyre pressure monitoring மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் electronic parking brake ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bharat Mobility Global Expo 2025, auto Expo 2025, MG Unveils Majestor SUV, MG Gloster, Toyota Fortuner