பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! குஷ்பு வெளியிட்ட அதிமுக்கிய தகவல்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான பாரதி பாஸ்கர், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இடம்பெற்று ஏராளமான தமிழர்களின் மனங்களை வென்றவர்.
தனியார் வங்கியில் பணியாற்றி வந்த பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை சோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகை குஷ்பு டுவிட்டரில், அழகிய தமிழ் மற்றும் அழகான புன்னகையுடன் நன்கு அறியப்படும் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
#BharathiBhaskar ma known for her wit n smile, apart from her tamil, has suddenly taken ill. Every tamilian world over will always have a smile reserved for her. She has undergone a surgery on her brain. Pls pray for her speedy recovery. World needs a beautiful soul like her. ?
— KhushbuSundar (@khushsundar) August 9, 2021