ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உள்ளது! ஒலிம்பிக் தோல்விக்கு பின் தமிழக வீராங்கனை பவானி தேவி உத்வேகம்
டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் ரவுண்ட் 32-வில் வெளியேறி தமிழக வீரராங்கனை பவானி தேவி ட்விட்டரில், தோல்வியை சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் பதிவிட்டுள்ளார்.
முதல் சுற்றில் துனிஷியா வீராங்கனை Nadia Azizi வீழ்த்திய பவானி தேவி, அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
என் வாள்வீச்சு வாழ்க்கையில் மிக முக்கியமான நாள், இது உற்சாகமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உள்ளது.
நான் முதல் போட்டியை 15/3 என Nadia Azizi எதிராக வென்று, ஒலிம்பிக் போட்டியில் வென்ற முதல் இந்திய வாள்வீச்ச வீரராக ஆனேன்.
ஆனால், 2வது போட்டியில் நான் உலகின் டாப் 3 வீரர் Manon Brunet-க்கு எதிராக 7/15 என்ற கணக்கில் தோற்றேன்.
நான் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினேன், ஆனால் வெல்ல முடியவில்லை. என்னை மன்னிக்கவும்.
ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உள்ளது, நான் எனது பயிற்சியைத் தொடருவேன், நிச்சயமாக பிரான்சில் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று என் நாட்டை பெருமைப்படுத்த கடுமையாக உழைப்பேன்.
Every end has a beginning, I will continue my practice and definitely work hard to win a medal at the next Olympics in France and make my country proud.
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) July 26, 2021
I want to thank each one of you who stood by me.
எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என பவானி தேவி பதிவிட்டுள்ளார்.