ரூ.9500 கோடி ஆர்டர் பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனம் BHEL
இந்தியாவின் மத்திய பொதுத்துறை நிறுவனமான Bharat Heavy Electricals Limited (BHEL) அனல் மின் திட்டத்திற்காக ரூ.9500 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது.
கனரக மின் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம், National Thermal Power Corporation (NTPC Limited) நிறுவனத்தால் கட்டப்பட்ட 1,600 மெகாவாட் திறன் கொண்ட சிங்ராலி (Singrauli) அனல் மின் திட்டத்திற்கான (Stage-II) ஆர்டரைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆர்டரின் மதிப்பு ரூ.9,500 கோடி அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் சோனேபத்ரா மாவட்டத்தில் சிங்ராலி சூப்பர் அனல் மின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1,600 மெகாவாட் (2x800 மெகாவாட்) மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
BHEL நிறுவனத்தின்படி, முதல் 800 மெகாவாட் அலகு 50 மாதங்களிலும், இரண்டாவது அலகு 54 மாதங்களிலும் முடிக்கப்படும்.
இந்த ஆர்டரில் உபகரணங்கள் வழங்கல், கட்டமைத்தல் சிவில் பணிகள் ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
BHEL NTPC, Bharat Heavy Electricals Limited, National Thermal Power Corporation, Business, Singrauli thermal power project