ஒரே டி20 போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்! வரலாற்று சாதனை
பூட்டானைச் சேர்ந்த சோனம் யேஷே, டி20 போட்டி ஒன்றில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புதிய சாதனை படைத்தார்.
நம்காங் 50 ஓட்டங்கள்
மியான்மர் மற்றும் பூட்டான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கெலெஹுவில் நடந்தது.
முதலில் ஆடிய பூட்டான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக நம்காங் சேஜே (Namgang Chejay) 45 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
நம்கே தின்லே 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ஓட்டங்கள் எடுத்தார். கோ கோ லின் து, பியா பியோ மற்றும் துயா ஆங் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
சோனம் யேஷே
அடுத்து களமிறங்கிய மியான்மர் அணி, சோனம் யேஷேயின் மிரட்டலான பந்துவீச்சினால் நிலைகுலைந்தது. 9.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மியான்மர் 45 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பூட்டான் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபாரமாக பந்துவீசிய சோனம் யேஷே (Sonam Yeshey) 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |