ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப்பந்து வீச்சாளர்! CSK-க்கு எதிரான போட்டியில் வரலாறு படைத்த வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 200வது ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார்.
புவனேஷ்வர் குமார்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றையப் போட்டியில், RCB அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.

இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது விக்கெட்டுகளின் எண்ணிக்கை 200-ஐ கடந்தது.
ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்தார். 192 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் இந்த மைல்கல்லினை எட்டியுள்ளார்.
இதற்கு முன் டிவைன் பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். சுழற்பந்துவீச்சாளர்களில் யுஸ்வேந்திர சஹால் முதல் வீரராக 200 விக்கெட்டுகளை கடந்திருந்தார்.

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
- யுஸ்வேந்திர சஹால் - 205
- புவனேஷ்வர் - 202
- டிவைன் பிராவோ - 183
- பியூஷ் சாவ்லா - 181
- அமித் மிஷ்ரா - 174

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |