ஹாங்காங் சிக்ஸ் தொடர்; புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
bhuneshwar kumar to lead india at hongkong sixes 2026: ஹாங்காங் சிக்ஸ் தொடருக்கு, புவனேஷ்வர் குமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சிக்ஸ்
ஹாங்காங்கில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஹாங்காங் சிக்சஸ் தொடர், பல வித்தியாசமான விதிமுறைகளை கொண்டுள்ளது.
இதில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒரு இன்னிங்ஸிற்கு 6 ஓவர்கள் வீசப்படும். விக்கெட் கீப்பரை தவிர அனைவரும் ஒரு ஓவர் வீச வேண்டும்.

ஒரு வீரர் 50 ஓட்டங்கள் எடுத்து விட்டால், ஆட்டமிழக்காமல் ஓய்வு பெற்று விடுவார்.மற்ற துடுப்பாட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களத்திற்கு வரலாம்.
22வது ஹாங்காங் சிக்சஸ் தொடர் ஹாங்காங்கில் வரும் 30 அக்டோபர் தொடங்கி 1 நவம்பர் வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கு பெறுகின்றன.
புவனேஷ் குமார் தலைமையில் இந்திய அணி
இந்நிலையில், 2026 ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அணித்தலைவராக புவனேஷ்வர் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நடராஜன், க்ருனால் பாண்டியா, ஷஷாங்க் சிங், ராகுல் தெவாடியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
STACKED! 🔥 Maximum format. Maximum firepower. Team India is locked, loaded, and ready to take over the Hong Kong Sixes! 🇮🇳💥 #TurnItUpToSix #HongKongSixes https://t.co/aNSKqkDfd1
— Cricket Hong Kong, China (@CricketHK) October 5, 2026
குரூப் C பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா, அக்டோபர் 30 ஆம் திகதி பாகிஸ்தானையும், அக்டோபர் 31 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிர்கொள்ள உள்ளது.
2025 ஹாங்காங் சிக்சஸ் தொடரில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக உள்ளது. இதில், இந்திய அணி 12வது இடத்திற்கு தள்ளப்பட்டது.