Omicron பரவல் தொடர்பில் வெள்ளைமாளிகை வெளியிட்ட எச்சரிக்கை: அச்சத்தில் பைடன் நிர்வாகம்
அமெரிக்காவில் Omicron பரவல் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி பைடன் நிர்வாகம் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தற்போதைய சூழலில் நெருக்கடியை சந்தித்துவரும் மருத்துவமனைகள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இதனை எதிர்கொள்ள பைடன் நிர்வாகம் முக்கிய முடிவுகளை முன்னெடுக்கும் என்றே நம்புவதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் Omicron பரவலால் மிகப்பெரிய அலை ஏற்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக வெள்ளைமாளிகை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மிக ஆபத்தான டெல்டா மாறுபாடு போன்ற நிலை Omicron பரவலால் இருக்காது என்பது நம்பிக்கை அளிக்கும் விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தற்போது உறுதி செய்யப்படும் புதிய கொரோனா நோயாளிகளில் 3% ஓமிக்ரான் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அலாஸ்கா மற்றும் கொலம்பியா மாவட்டம் உட்பட 33 அமெரிக்க மாநிலங்களில் தற்போது ஓமிக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, கலிபோர்னியாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நியூயார்க்கில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவில், நியூயார்க் நகரத்தைப் போல பார்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை பொதுமக்கள் காட்ட வேண்டும்.
அமெரிக்காவில் கொரோனா பரவல் கடந்த இரு வாரங்களில் 49% அதிகரித்து, தற்போது தினசரி சராசரியாக 120,000 பேர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 66,000 அமெரிக்கர்கள் சிகிச்சை பெறுவதால், கடந்த இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளில் தங்குவோர் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை திங்களன்று 50 மில்லியனைத் தாண்டியது மற்றும் இறப்பு எண்ணிக்கை 800,000 ஐ வேகமாக நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும்,
இதுவரை 27% பேர்கள் மட்டும் மூன்றாவது தடுப்பூசி எனும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.