சீட்டு கட்டு போல் சரிந்த அடுக்குமாடி கட்டிடம்.. கிட்டதட்ட 100 பேர் உயிருடன் புதைந்த கோரம்! அவசர நிலை பிரகடனதிற்கு ஜனாதிபதி ஒப்புதல்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
நேற்று புளோரிடா மாநிலத்தின் Surfside நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் பாதி சீட்டு கட்டு போல் சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் ஒருவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும், 51 முதல் 99 பேர் வரை காணவில்லை என்றும், 31 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இத்துயர சம்பவத்தின் போது அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து வீடுகளிலும் ஆட்கள் இருந்ததாக கட்டிடத்தின் மேலாளர் தகவல் தெரிவித்ததாக Surfside மேயர் Charles Burkett தெரிவித்துள்ளார்.
இதனால், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மியாமி மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
JUST IN: Video I’ve obtained of the building collapse in Surfside, Florida. pic.twitter.com/BGbRC7iSI9
— Andy Slater (@AndySlater) June 24, 2021
கட்டிடம் சரிந்ததை தொடர்ந்து புளோரிடா மாநில அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. இந்நிலையில் புளோரிட அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநில மற்றும் உள்ளூர் அரசு மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பைடன் உத்தரவிட்டுள்ளார்.