இத்தாலிய பிரதமருக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்., குவியும் விமர்சனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) இத்தாலிய பிரதமருக்கு சல்யூட் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில், ஜோ பைடனின் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் G7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கலந்து கொண்டார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் வியாழன் அன்று G7 உச்சி மாநாட்டின் சின்னத்தின் முன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இதற்கிடையில், இந்த புகைப்படம் எடுத்த பிறகு, பைடென் இத்தாலிய பிரதமர் மெலோனியுடன் உரையாடினார். அதன் பிறகு மேடையில் இருந்து செல்லும் போது சல்யூட் செய்தார். இதைப் பார்த்து சிரித்த மெலோனி மற்ற நாட்டுத் தலைவர்களிடம் சென்றார்.
Did Giorgia Meloni join the US Military and no one told us?
— Joey Mannarino (@JoeyMannarinoUS) June 13, 2024
Why did Biden just salute her? ? pic.twitter.com/BoW7Q1KTzh
இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மன நிலை மற்றும் உடல் நிலை குறித்த மீம்ஸ்கள் மீண்டும் வலம் வருகின்றன. சிலர் அவரது செயலை ஆதரித்தனர், மற்றவர்கள் அதை விமர்சித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |