அமெரிக்க மாணவர்களுக்கான கடன் தள்ளுபடி: ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கி இன்ப அதிர்ச்சி!
கல்லூரி பட்டதாரிகளுக்கு 10,000 டாலர்கள் கடனை தள்ளுபடி.
இவை நாட்டின் பணவீக்க நெருக்கடியில் புதிய மாற்றத்தை சேர்க்கும் என தகவல்
அமெரிக்காவில் கடனில் சிக்கித் தவிக்கும் பல கல்லூரி பட்டதாரிகளுக்கு 10,000 டாலர்கள் கடனை தள்ளுபடி செய்வதாக நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த கூட்டாட்சி மாணவர்கள் கடன் 1.6 டிரில்லயன் டாலர்கள் என்று இருக்கும் நிலையில், இவை கூடுதலாக 45 மில்லியன் என்ற கணக்கில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, இது அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தின் மீது குறிப்பிடத்தக்க சுமையை வழங்கி வருகிறது.
இதுத் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சியினர் கடனாளிக்கு 50,000 டாலர்கள் வரை ஜோ பைடன் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
In keeping with my campaign promise, my Administration is announcing a plan to give working and middle class families breathing room as they prepare to resume federal student loan payments in January 2023.
— President Biden (@POTUS) August 24, 2022
I'll have more details this afternoon. pic.twitter.com/kuZNqoMe4I
இந்தநிலையில் புதன்கிழமை மாணவர்கள் கடன் தள்ளுபடி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடனில் சிக்கித் தவிக்கும் பல கல்லூரி பட்டதாரிகளுக்கு 10000 டாலர்கள் கடனை தள்ளுபடி செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கடன் தள்ளுபடி மூலம் புதிய நுகர்வோர் செலவினங்களுக்கான நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை விடுவிக்கும் மற்றும் நாட்டின் பணவீக்க நெருக்கடியில் புதிய மாற்றத்தை சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty
மேலும் இதுத் தொடர்பாக கல்வி செயலாளர் மிகுவல் கார்டோனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரிப் பட்டம் அல்லது சான்றிதழைப் பெறுவது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும்.
ஆனால் பலருக்கு மாணவர்களின் கடன் அவர்களின் குடும்பத்திற்காக வீடு வாங்குவது, தொழில் தொடங்குவது போன்ற கனவுகளை அடையும் திறனைத் தடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகம் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் உள்ளது...உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
REUTERS
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு, நவம்பர் மாத காங்கிரஸ் தேர்தலில் சக ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.