அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு உடல்நலக்குறைவா? வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான தகவல்
உரையாடல்களின் போது தொடர்ச்சியாக இரும்பும் அமெரிக்க ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து எழுந்துள்ள கேள்விக்கு வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் Jen Psaki பதிலளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல தருணங்கில் உரையாடும் போது தொடர்ச்சியாக இரும்பி வருவதால், அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும், ட்விட்டரில் #Bidencough என்ற ஹேஸ்டாக் டிரெண்டானது.
இந்நிலையில், பேசும் போது ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ச்சியான இருமல் பற்றிய கவலைகளை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி நிராகரித்தார்.
இது ஒரு கவலைக்குரிய பிரச்சனை என நான் நினைக்கவில்லை. நமக்கு இருமல் அல்லது லேசான சளி ஏற்பட காரணங்கள் பல உள்ளன.
ஜனாதிபதி உடன் பயணம் செய்யும் பைடனின் மருத்துவரைக் குறிப்பிட்ட வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் , அமெரிக்க ஜனாதிபதி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் என கூறினார்.
78 வயதான பைடனின் அடுத்த மருத்துவ பரிசோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த Jen Psaki, இதுகுறித்த தகவல் ஏதும் என்னிடம் இல்லை.
விரைவில் அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார். அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது பத்திரிகையாளருக்கு  தகவல் தெரிவிக்கப்படும், விவரங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என Jen Psaki  பதிலளித்துள்ளார்.    
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        