ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு... இனிதான் ஆட்டம் ஆரம்பம் என அறிவித்த உக்ரைன்
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ள நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் போர் தீவிரமடையும்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவால் முதன்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனால் பயன்படுத்த முடியும்.
இருப்பினும், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ATACMS ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம் என ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடையும் சாத்தியங்களை கருத்தில் கொண்டு முன்னர் அத்தகையை தாக்குதல்களை முன்னெடுக்க அமெரிக்கா அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆனால் தற்போது, புதிதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் பொறுப்பெடுக்கவிருக்கும் நிலையில்,
உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை கடுமையாக விமர்சித்துவரும் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்பில் கவலை எழுந்துள்ளதால், டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரத்தை ஒப்படைப்பதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெரிய கொள்கை மாற்றத்தை ஜோ பைடன் முன்னெடுத்துள்ளார்.
உண்மையில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளில் ATACMS ஏவுகணைகளை ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக உக்ரைன் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளது.
கிரிமியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம், விமானப்படையின் தளங்கள் மற்றும் சபோரிஜியா பிராந்தியத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் என தொடர்புடையை ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் முன்னெடுத்துள்ளது.
இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்
186 மைல்கள் வரையில் இலக்குகளை தாக்கும் வலுவான இந்த ஏவுகணைகளே அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு அளித்துள்ள ஆயுதங்களில் மிகவும் சக்திவாய்ந்தது. மேலும், வடகொரிய இராணுவம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் களமிறக்கப்படும் நிலையில், ஜோ பைடன் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் எதுவும் தமக்கு இதுவரை அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இனிமே தான் ஆட்டம் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.
வெறும் வார்த்தைகளால் போரிடுவதல்ல, ஏவுகணைகள் இனி பேசிக்கொள்ளட்டும் என்றார். ATACMS ஏவுகணைகளால் இனி ரஷ்ய நகரங்களை உக்ரைனால் தாக்க முடியும்.
ரஷ்யாவின் சுமார் 1,000 சதுர கி.மீ நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியுள்ளதால், அங்கிருந்து இனி ரஷ்ய நகரங்களை உக்ரைன் தாக்கக் கூடும்.
மேலும், போரில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் எண்ணிக்கையிலான ATACMS ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போதைய சூழலில், உக்ரைனால் வலுவான தாக்குதலை முன்னெடுக்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |