கொரோனா தடுப்பூசி போட்டால் பீர் இலவசம்! ஜனாதிபதி அறிவிப்பு! எந்த நாட்டில்?
மக்களை கொரோனா தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கங்கள் மாடு இலவசம், தங்க நகை இலவசம் என பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.
அந்த வரிசையில், ஜூலை 4 ம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னர் வயது வந்தோரை தடுப்பூசி போட ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு இலவச பீர் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த கோடையில் நாட்டை இயல்புநிலைக்கு திருப்பும் முயற்சியில் ஜூலை மாத தொடக்கத்திற்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசி போட அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
இந்த இலவச பீரை தங்கள் நிறுவனம் கொடுக்கும் என அமெரிக்காவின் பிரபல பீர் நிறுவனமாக Anheuser-Busch அறிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள்தொகையில் இன்றுவரை வயது வந்தோர் 62.8 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், மேலும் 133.6 மில்லியன் பேர் இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.