ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பா?
ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்லார்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கு மேலாக சண்டையிட்டு அராஜகம் செய்து வருகின்றனர். உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா சண்டையை தொடர்ந்து நடத்துகிறது.
இது ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா என்ற கேள்வியை சில தினங்களாக எழுப்பி வந்தது. இது குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
விளாடிமிர் புதின் "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று கூறியபோது, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறாரா என்று வாஷிங்டனில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, பைடன் அதற்கு ‘இல்லை’ என்று பதிலளித்தார்.